×

குருபார்வைக்கு வழிகாட்டும் கோவிலூர் சென்னகேஸ்வரர்

வியாசராஜர் பிரதிஷ்டை செய்தது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த கோவிலூரில் இருக்கிறது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசென்னகேஸ்வரர் கோயில். 17ம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கோவிலூர் இருந்துள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான வியாசராஜர் என்ற முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது கோவிலூர் சென்னகேஸ்வர ெபருமாள் கோயில் என்றும் தகவல்கள் கூறுகிறது.

மன்னர்களால் ‘ஸ்ரோதிரியம்’ என்னும் மானியம் இந்த ஊருக்கு வழங்கப்பட்டது. இதனால் ஒரு காலத்தில் ஸ்ரோதிரியம் கோவிலூர் என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டவர்களாக இருந்துள்ளனர். சென்னகேஸ்வரரிடம் வேண்டுதல் வைத்து ஆண் சந்ததிகளை பெற்ெறடுத்துள்ளனர். திருப்பதி ஏழுமலையானின் அண்ணன் தான் இந்த சென்னகேஸ்வரர் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

பொதுவாக ெபருமாள் கோயில்களில் பைரவர் காட்சியளிப்பதில்லை. ஆனால் இந்த கோயிலில் பைரவர், மூலவரின் அருகிலேயே அருள்பாலிப்பது வியப்பான ஒன்று. சென்னகேஸ்வர பெருமாள் சன்னதியில் சிவன் அருள்பாலிப்பதும் கூடுதல் சிறப்பு. இந்த கோயிலில் அன்னை அமர்ந்த இடம், ருத்ரபூமி என்று தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உற்சவருடன் ஸ்ரீேதவி, பூதேவியும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஆஞ்சநேயர், கையில் வாளுடன் இருப்பதால் வீர ஆஞ்சநேயர் என்று வணங்கப் படுகிறார். இதேபோல் சென்னகேஸ்வர பெருமாள் விக்ரகம் சில ேநரங்களில் நரசிம்மரை போல் காட்சியளிப்பது அதிசயமாக கருதப்படுகிறது.

ராமானூஜரோடு விக்வஸ்சேனரும் கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அனைத்து நலன்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்ைகயாகும். சென்னகேஸ்வரர் கோயிலில் புரட்டாசி, மார்கழி மாதங்களில் விழாக்கள் களை கட்டும். இதில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில் பக்தர்கள் அலையென திரண்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவும் கோலாகலமாக நடக்கிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி ஸ்ரீசாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும் கோலாகலமாக நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் விதவிதமான நெய்ேவத்தியங்களை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு நெய்வேத்தியம் செய்யப்படுவதும் வியப்பானது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் சென்னகேஸ்வரரை மக்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும்போது பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் ேநர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குருபார்வை கோடி நன்மை என்பது ஜோதிட வாக்கு. இதனால் குருபார்வைக்காக பல்வேறு வேண்டுதல்களிலும், பரிகாரங்களிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் சென்னகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், குருவின் பார்வை இல்லாமலேயே நன்மைகள் நடக்கும். குருவின் அதிபதியான சென்னகேஸ்வரரை மனமுருக வழிபட்டால் மலை போல் வரும் துயரங்களையும் பனிபோல் மாற்றி விடுவார் என்பது ஜோதிட ஆய்வாளர்கள் கூறும் தகவல். இதனால் குருபகவானின் அனுக்கிரகம் வேண்டுபவர்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலூருக்கு வந்து சென்னகேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.

Tags : Kovilur Chennakeswarar ,gurus ,
× RELATED ‘ஒரே ஒரு குருக்கள் வர்றார்..’ஒன்லிடென் பீப்பிள்.. நாதக வேட்பாளர் ஆவேசம்